ஹார்மோன்கள் நலமா?

ஹெல்த்எஸ்.ராம்குமார், நாளமில்லாச் சுரப்பி நிபுணர்

ந்தப் பெண்ணுக்கு 12 வயதுதான்... ஆனால், அவளுக்கு அடிக்கடி ஏற்படும் கோபம் இயல்பானதாக இல்லை. சாதாரண விஷயங்களுக்குக்கூட திடீரெனக் கத்தித் தீர்த்துவிடுவாள். எப்போதும் ஒருவிதமான பதற்றம் வேறு! அவள் அம்மா என்னவென்று புரியாமல் திணறினார். தன் மகளுக்கு என்ன நடக்கிறது என ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, இது ‘‘ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் மனநிலை மாற்றம்” என்று கூறினார். `என்ன... 12 வயது பெண்ணுக்கு ஹார்மோன் குறைபாடா?’ என்று யோசிக்கிறீர்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick