அளவுக்கு மிஞ்சினால் ஆன்டிபயாட்டிக்கும் நஞ்சு!

எம்.அருணாச்சலம், பொதுநல மருத்துவர்

``சளியா காய்ச்சலா, எதுவா இருந்தாலும் ஒரு மாத்திரை சாப்பிடுங்க, சரியாயிடும்’’ - இது சாமான்யர்களின் கருத்தாக இருக்க, கொஞ்சம் படித்தவர்களோ ``சளி, காய்ச்சலுக்கு ஆன்டி பயாடிக் இன்ஜெக்‌ஷன் போட்டா போதும், கவலைப்பட வேண்டாம்’’ என்பார்கள். தலைவலி, ஜலதோஷம் என்றால் நேராக மெடிக்கல் ஷாப்புக்குச் சென்று, “எனக்குத் தலைவலிக்குது, ஜலதோஷம் பிடிச்சிருக்கு” என்று பிரச்னையைச் சொல்லி, தமக்குத் தெரிந்த ஆன்டிபயாட்டிக் மருந்தை வாங்கிப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அந்த மருந்தின் அளவு நமது பிரச்னைக்குரிய சரியான அளவா என்பது அவர்களுக்குத் தெரியாது.

ஆக, சிறுசிறு பிரச்னைகளுக்குக்கூட ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்தினால் காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி படிப்படியாக குறைந்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதேவேளையில், நோயின் பாதிப்பு, அதன் தீவிரம் தெரியாமல் வீரியமான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உடலுக்குள் செலுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick