சூப்பர் உமன் சிண்ட்ரோம் - சாதனை அல்ல; சோதனை! | Syndrome Super woman - Doctor Vikatan | டாக்டர் விகடன்

சூப்பர் உமன் சிண்ட்ரோம் - சாதனை அல்ல; சோதனை!

குடும்பம்சுபா சார்லஸ், மனநல மருத்துவர்

பெண் எப்போதும் அஷ்டாவதானியாக வலம் வர வேண்டியவள். மகளாக, மனைவியாக, அம்மாவாக, பணியிடத்தில் வேலை செய்கிறவராக, வேலை வாங்கும் அதிகாரியாக... இன்னும் பல பொறுப்புகளைத் தலையில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவள். ஒன்றுக்காக இன்னொன்றை விட்டுக்கொடுக்காமல், தான் சுமந்திருக்கும் அத்தனை அரிதார முகங்களையும் லாகவமாகக் கையாள வேண்டியவள்.

நியாயமாகப் பார்த்தால், எடுத்துக்கொள்கிற எல்லா பொறுப்புகளிலும் ‘மிஸ் பர்ஃபெக்ட்’ ஆக இருப்பது சாத்தியமில்லை. ஆனாலும், அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் பல பெண்களுக்கு இருப்பதில்லை. ‘தன்னால் எல்லாம் முடியும்’, ‘எதையும் சிறப்பாகச் செய்ய முடியும்’ என நம்பி, அதற்கான போராட்டத்துக்கும் தயாராகிறார்கள். ஒரு கட்டத்தில் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் மனமுடைந்து போகிறார்கள். பல பெண்களையும் பாதிக்கும் இந்த நிலைக்கு  ‘சூப்பர்உமன் சிண்ட்ரோம்’ எனப் பெயர் வைத்திருக்கிறது மனநல மருத்துவம். இதன் அறிகுறிகள் எப்படியிருக்கும், யாரை அதிகம் பாதிக்கும், தீர்வுகள் என்ன? விளக்கமாகப் பார்ப்போம்.

‘சூப்பர் மேன்’ என்கிறவர் நிஜத்தில் இல்லை. அது முழுக்கக் கற்பனை எனக் குழந்தைகளுக்குச் சொல்கிறோம். கிட்டத்தட்ட அதே மாதிரியானதுதான் ‘சூப்பர் உமன் சிண்ட்ரோமு’ம். சூப்பர்மேன் மாதிரி தாவுவதும், குதிப்பதும், பறப்பதும் எப்படி நிஜத்தில் சாத்தியமில்லையோ, அதுபோலத்தான் பெண்களுக்கு எல்லாப் பொறுப்புகளிலும் ‘தி பெஸ்ட்’ என்று பெயர் வாங்குவதும். சிறந்த மனைவி, சிறந்த அம்மா, சிறந்த ஊழியர்... என எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் சிறந்த பட்டத்துடனேயே வளையவருவது முடியாத காரியம். இது புரியாமல் கற்பனை வாழ்க்கையுடன் போட்டி போடும்போதுதான் பிரச்னையே. விளைவு? மனஅழுத்தம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick