அதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா? | What extreme sleep causes Anemia - Doctor Vikatan | டாக்டர் விகடன்

அதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா?

ஹெல்த்சரண்யா பாரதி பொதுநல மருத்துவர்

‘எனக்கு என்னமோ தெரியல... அதிகமாக தூங்கறேன், எழுந்திருக்கவே முடியல’ இந்த வசனத்தை இப்போது பலரிடமும் கேட்க முடிகிறது. கண்களில் சோர்வுடன் ஒருவித பலவீனத்துடன் தங்கள் பணியைச் செய்யத் தொடங்குகின்றனர். இதற்கு ரத்தச்சோகை காரணமாக இருக்கலாம். திசுக்களுக்கு ஆக்சிஜன் கொண்டு சேர்க்கும் பணியை ரத்தச் சிவப்பு அணுக்கள் மேற்கொள்கின்றன. ரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதையே ரத்தச்சோகை என்கிறோம்.

ரத்தச்சோகை இருக்கும்போது, வெகு விரைவில் உடல் சோர்வடையும். சோர்வு ஏற்படும்போது ஓய்வெடுக்கத் தோன்றும். ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு அதிகத் தூக்கம் வரும். இரும்புச்சத்து, வைட்டமின் பி12 குறைபாடு, ஹீமோகுளோபின் உற்பத்திக் குறைவு, அவை குறுகிய காலத்தில் அழிக்கப்படுவது உள்ளிட்ட பல காரணங்களால் ரத்தச்சோகை ஏற்படலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick