வலிப்பு VS பக்கவாதம் ஒரு அலசல்

ஹெல்த்ம.பாலமுருகன், நரம்பியல் நிபுணர்

டல்நலம் தொடர்பான மூட நம்பிக்கைகளுள் முதன்மையானது காக்கா வலிப்பு. பேய் பிடித்திருப்பதால் வலிப்பு வருகிறது, இரும்பு கொடுத்தால் சரியாகிவிடும்... என்று பல கட்டுக்கதைகள் இதற்கு உண்டு. பக்கவாதம் மற்றும் வலிப்பு நோய் என இரண்டுமே மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள். இரண்டுக்குமான காரணங்களும், விளைவுகளும் வெவ்வேறானவை.

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு அல்லது வெடிப்பு காரணமாக ஏற்படுவது பக்கவாதம். மூளையின் மின்னணுத் தொடர்பில் பிரச்னை ஏற்படும்போது வருவது வலிப்பு. பக்கவாதம் காரணமாக மூளையின் செயல்திறன் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். வலிப்பின் தாக்கம் தற்காலிகமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick