கால் ஆணி தவிர்ப்பது எப்படி?

ஹெல்த்ஸ்ரீதேவி அனந்தராமன், சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்

டலின் ஒட்டுமொத்த எடையையும் தாங்குபவை கால்களும் பாதங்களும்தான். நம்முடைய இயக்கத்தின்போது ஏற்படக்கூடிய டன் கணக்கிலான உடலின் அழுத்தத்தைத் தாங்கும் அற்புதமான அமைப்பு அது. பாதம் 26 எலும்புகளையும், 33 மூட்டுகளையும், 50க்கும் மேற்பட்ட தசைநார்களையும், இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட வியர்வைச் சுரப்பிகளையும் உள்ளடக்கிய அமைப்பு. உடலைத் தாங்குவது மட்டுமல்ல... உடல் சந்திக்கும் பிரச்னைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் பாதங்கள் இருக்கின்றன. பாதப்பராமரிப்பு இன்மையால் பூஞ்சைத் தொற்று முதல் பல பிரச்னைகள் காலில் ஏற்படுகின்றன. இவற்றில் ஒன்று பாத ஆணி. பாதங்களின் அடிப்பாக  சதைப்பகுதியில் ஏற்படுவதால், பெரும்பாலும் நம்மால் இதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிவதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick