உடல் உறுப்பை அகற்றுவது ஆபத்தா?

ஹெல்த்பிரசன்னா, இரைப்பை குடலியல் மருத்துவர்

பித்தப்பை கல்பாதிப்பு உள்ள அனைவரும் கேட்கும் கேள்வி, ‘கல்லை மட்டும் அகற்ற முடியாதா? ஏன் பித்தப்பையை முற்றிலுமாக அகற்றுகிறீர்கள்?’ என்பதுதான். பித்தப்பை என்பது மிகவும் மென்மையான உறுப்பு. அதில், அறுவைசிகிச்சை செய்து கல்லை அகற்றி மீண்டும் தையல் போடுவது எல்லாம் முடியாத காரியம் என்று, அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

மனித உடல், ஒரு சிக்கலான அமைப்பு. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் எனப் பல உறுப்புகள் ஒன்றிணைந்து இயங்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. நாம் உயிர்வாழ இதயம் போன்ற சில உறுப்புகள் கட்டாயம் தேவை. இருப்பினும், இதில் நல்ல விஷயமும் உள்ளது. மனித உடல், சில உறுப்புகள் இல்லை என்றாலும், அவற்றின் பங்களிப்பு இல்லை என்றாலும் கூட ஆரோக்கியமாக வாழும் தன்மை கொண்டது.

கண்கள், கைகால்கள் போன்ற இரட்டை உறுப்புகளில் ஒன்றையோ இரண்டையுமோ நீக்கினாலும் ஒருவர் உயிர் வாழ முடியும். அதேபோல், குடல் வால், பித்தப்பை, டான்ஸில் போன்றவற்றை  நீக்கினாலும் எந்தப் பிரச்னையும் இல்லை.

சிறுநீரகம், நுரையீரல் போன்ற இரட்டை உள் உறுப்புக்களில் ஒன்றை நீக்கினாலும் நம்மால் வாழ முடியும். ஆனால், நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இரைப்பை, சிறுகுடல், பெருங்குடலின் சில பகுதிகளை அகற்றினாலும் அதாவது நீளத்தைக் குறைத்தாலும் உயிர் வாழ முடியும். இவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க, மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick