ரோட் ரேஜ் எனும் அத்துமீறல் வேண்டாமே இந்த வெறித்தனம்! | Avoid Road Race for public safety - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ரோட் ரேஜ் எனும் அத்துமீறல் வேண்டாமே இந்த வெறித்தனம்!

ஹெல்த்ஜி.ஆர்.குறிஞ்சி, மனநல மருத்துவர்

சாலை விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, வாகனத்தை ஓட்டுவது சிலருக்கு த்ரில்லிங்கான அனுபவமாக இருக்கலாம்... ஆனால், விபத்தில்  சிக்கும்போது அது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. சிக்னலை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் பயணிப்பது, மற்ற வாகன ஓட்டிகளிடம் சண்டைப்போடுவது போன்ற நிகழ்வுகளை தினமும் சாலையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இத்தகைய சாலை அத்துமீறல்கள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நிகழ்கின்றன. சாலை அத்துமீறலுக்குக் காரணங்கள் என்னென்ன? சாலைப் பயணம் மிகவும் பாதுகாப்பாக இருக்க, நாம் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.

ரோட் ரேஜ்

சாலை விதியை மதித்துப் பயணித்தால் அனைவருக்கும் நல்லது. ஆனால், தன்னை யாரும் முந்திவிடக் கூடாது என்று வேகமாக ஓட்டுவது, யாராவது ஓவர்டேக் செய்துவிட்டால், அவர்களை மீண்டும் ஓவர்டேக் செய்யும் வரை விடாமல்  துரத்துவது, சாலை விதிகளை மதிக்காமல் செல்வது உள்ளிட்டவை எல்லாம் சாலை அத்து மீறலாகக் கருதப்படுகிறது. இதையே ‘ரோட் ரேஜ்’ என்கிறோம். தற்போது, இந்தப் பிரச்னை வேகமாக அதிகரித்துவருகிறது. பல விபத்துகள், காயங்கள் சாலை  நடத்தை  மீறலால்தான்   தூண்டப்படுகின்றன. வெறியால்தான் நிகழ்கின்றன. பெண்களைவிட ஆண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக உள்ளது. 18-40 வயது வரை உள்ளவர்களுக்கே இந்தப் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சாலை அத்துமீறல் அறிகுறிகள் என்னென்ன?


* சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்வது.

* குறிப்பிட்ட வேக அளவைத் தாண்டி அதிவேகத்தில் செல்வது.

* ஹாரனை அடித்துக்கொண்டே இருப்பது. முன்னால் இருப்பவர்களால் செல்ல முடியாது எனத் தெரிந்தும் காரணமின்றி ஹாரன் அடிப்பது.

* சாலையில் வரும் மற்ற ஓட்டுநர்களைப் பார்த்து காரணம் இல்லாமல் முறைப்பது, திட்டுவது.

* முன்னால் செல்லும் வாகன ஓட்டி மெதுவாகச் செல்வதாக நினைத்து, அடிக்கடி விளக்கை அடித்து சிக்னல் செய்வது.

* சாலையில் செல்பவர்களிடம் கோபத்துடன் கெட்ட வார்த்தைகளைப் பேசிச் சண்டையிடுவது.

மேற்சொன்ன ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்களில் அடிக்கடி ஈடுபடுவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கக்கூடும்.

மது அருந்தி இருந்தாலோ, வேறு ஏதேனும் போதைப் பொருள் உபயோகப்படுத்தி இருந்தாலோ தன்னிலை மறந்த நேரத்தில் சாலை நடத்தை மீறல் நிகழ்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick