சம்மர் கேம்ப் - பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் ஸ்மார்ட் டிப்ஸ்...

குடும்பம்கே.ஏ.தியாகராஜன், ஸ்போர்ட்ஸ் மெடிசின் துறை நிபுணர் - சந்திரசேகர், குழந்தைகள் சிறப்பு மருத்துவர்

விளையாட்டு வகுப்பைக்கூட பாட ஆசிரியர்கள் அபகரித்துக்கொள்ள, வருடம் முழுக்கப் படித்துக் களைத்த குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை என்பது கொண்டாட்டம்தான்.

இரண்டு மாத விடுமுறையில் அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பது பெற்றோருக்குத் திண்டாட்டம்.

பிள்ளைகளின் சேட்டைகளில் இருந்து தப்பிக்க, பெற்றோர் தஞ்சமடைவது சம்மர் கேம்ப் என்கிற பெயரில் மூலைக்கு மூலை நடத்தப்படுகிற விதம் விதமான பயிற்சி வகுப்புகளில்!

உறவுகள் சூழ வாழ்ந்த அந்தக் காலங்களில் விடுமுறைகளில் சொந்தபந்தங்களின் வீடுகளுக்குப் போவதும், விளையாடிக் களிப்பதும் வழக்கமாக இருந்தது. இன்று அபார்ட்மென்ட் களுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள் குழந்தைகள். அந்தச் சிறையிலிருந்து அவர்களை விடுவிக்க, சம்மர் கேம்ப் பயிற்சிகள் கட்டாயம் தேவை. சம்மர் கேம்ப் பயிற்சிகளில் சேர்ப்பதற்கு முன் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி அலசுகிறார்கள் மருத்துவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick