உடல் சமநிலைக்கு உத்தரவாதம் தரும் பயிற்சிகள்!

ஃபிட்னெஸ்கார்த்திக் முருகேசன், பிசியோதெரபிஸ்ட்

நாம் எந்த வேலையைச் செய்யவேண்டும் என்றாலும், அதற்கு உறுதுணையாக இருப்பது நமது உடலின் சமநிலைத்தன்மை. பல்வேறு காரணங்களால், உடல் சமநிலைத்தன்மையில் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவற்றை மேம்படுத்த, இந்த பேலன்ஸிங் பயிற்சிகள் உதவும். நாம் அடிக்கடி விளையாட்டாகச் செய்யக்கூடிய சிலவற்றைப் பயிற்சிகளாகச் செய்யலாம். இப்படிச் செய்யும்போது, விளையாட்டுடன் அதற்கான பலன்களும் நமக்குக் கிடைக்கும். பேலன்ஸிங் பெற உதவும் பெர்ஃபெக்ட் பயிற்சிகள் இங்கே...

யார் செய்யலாம்... செய்யக் கூடாது?

70 வயது வரை உள்ள அனைவரும் இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். பேலன்ஸிங் குறைபாடு  உள்ளவர்களும், பக்கவாதம் உள்ளவர்களும் இந்தப் பயிற்சியைத் தாராளமாகச் செய்யலாம். அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், அடிபட்டவர்கள் செய்யக் கூடாது.

இதில் உள்ள அனைத்துப் பயிற்சிகளையும் தினமும் மூன்று வேளைகளும் செய்யலாம். 15 விநாடிகள் 10 முறை என்ற கணக்கில் தொடர்ந்து செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick