ஏன்? எதற்கு? எதில்? - வைட்டமின் பி 12

உணவுஅம்பிகா சேகர், டயட்டீஷியன்

சையனோ கோபாலமின் என்றும் அழைக்கப்படுகிறது வைட்டமின் பி 12. நீரில் கரையும் வைட்டமின் இது. மூளை மற்றும் நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டிலும் ரத்த உற்பத்தியிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் இந்த உயிர்ச்சத்து மிக முக்கியம்.

மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்ட இது, உயிர் வேதியியலில் அபூர்வ தனிமமான கோபால்டைக் கொண்டுள்ளது. இந்த உயிர்ச்சத்தை உடல் இயற்கையாகத் தயாரித்துக் கொள்வது சிரமம் என்பதால், உணவு மற்றும் ஊசி மருந்துகளின் மூலமே குறைபாடு சரி செய்யப்படுகிறது. வரலாற்று ரீதியாக ரத்தச்சோகை நோயுடன் கொண்டிருந்த உறவின் மூலம்தான் வைட்டமின் பி 12  கண்டறியப்பட்டது.  நம் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களால்  உருவாக்கப்படும் பி 12 உயிர்ச்சத்து, உணவில் உள்ள புரதத்துடன் சேர்ந்து சத்துகளை உறிஞ்சுவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick