ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

எமெர்ஜென்சி டாக்டர்

சாலையில் விபத்து நடந்தாலோ அல்லது யாருக்காவது மருத்துவ அவசரம் என்றாலோ பெரும்பாலானோர் பதற்றமடைந்து விடுவார்கள். காரணம், என்ன செய்ய வேண்டுமென்று தெரியாததுதான். அந்தச் சமயங்களில் ஒரு வெர்ச்சுவல் டாக்டராகவே உதவி செய்கிறது இந்த ஆப். ஒவ்வொரு எமெர்ஜென்சி தேவைக்கும் என்ன மாதிரியான முதல் உதவி தர வேண்டும் என்பதை படங்களுடன், ஸ்டெப் பை ஸ்டெப்பாக விவரிக்கிறது இந்த ஆப். அதைப் பார்த்தே தேவையான முதலுதவியை யார் வேண்டுமென்றாலும் கொடுக்க முடியும்.

அவசரத்துக்கு மொபைலில் ‘இணைய சேவை’ தேவையுமில்லை. ஆஃப்லைன் மோடிலும் வேலை செய்யும் இந்த ஆப். அது மட்டுமில்லாமல், நாம் இருக்கும் இடத்தில் இருந்து அருகில் இருக்கும் மருத்துவமனைகளையும், அங்கு விரைவாக நம்மைக் கொண்டு சொல்லும் வழிகளையும் சொல்கிறது. எமர்ஜென்சி உதவிக்கு 112 அழைக்கவும் ஆப்பில் வசதி உண்டு.

https://play.google.com/store/apps/details?id=org.indianredcross.firstaid&hl=en

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick