டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்! - தவிர்ப்பது எப்படி? | Causes of Neck Pain - Doctor Vikatan | டாக்டர் விகடன்

டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்! - தவிர்ப்பது எப்படி?

ஹெல்த்ரவி கிருபானந்தன், மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்

‘நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை’ எனப் பாரதி பாடியிருப்பார். ஆனால், இன்று பெரும்பாலானோருக்கு நிமிர்ந்த நடையும் இல்லை; நேர்கொண்ட பார்வையும் இல்லை. அனைத்தும் செல்போனை நோக்கியே இருக்கிறது. பெரும் பாலானோருக்கு இருந்த நிமிர்ந்த நெஞ்சம், இன்றளவில் கூன் விழுந்துவிட்டது. காரணம் செல்போன்கள். மெசேஜ் செய்துகொண்டும், பேஸ்புக் பார்த்தபடியும், பாட்டு கேட்டபடியும் மக்கள் நடமாடத் தொடங்கிவிட்டனர். கழுத்து வளைந்து, செல்போனை நோக்கியபடி மாறியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்குப் பெயர் ‘டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்’. இதைத் தவிர்க்கும் வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.

யாரை அதிகம் பாதிக்கிறது? காரணங்கள் என்னென்ன?

இன்று 50% மக்களுக்கு,  குறிப்பாக இளம் வயதினருக்கு இந்தப் பிரச்னை உள்ளது. இன்டர்நெட் அதிகமாக உபயோகிப்பதால் அவர்கள் தொடர்ந்து செல்போனையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர். விழித்திருக்கும் நிலையில் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். மற்றபடி, பெரும்பாலான நேரத்தில் செல்போனில் மூழ்கியபடியே உள்ளனர். அதுபோல், கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick