இதய நோயாளிகள் உடற்பயிற்சி செய்யலாமா?

ஹெல்த்தினகர், பொது மருத்துவர் - தினேஷ், உடற்பயிற்சியாளர்

“நமக்குன்னு ஏதாவது நேரத்தை ஒதுக்கணும்பா... இல்லைன்னா வெயிட் போட்ருவோம்” - இது பெரியவர்கள் மத்தியில் பேசப்படும் டயலாக்.

“பக்கத்து வீட்டுக்காரருக்கு ஐம்பது வயசானாலும் ஜாகிங் போறார். நீங்களும் இருக்கீங்களே..!” - இது இல்லத்தரசியின் ஆதங்கம். இதுபோன்ற அட்வைஸ்கள் எல்லாம் சரியா... அனைவருக்கும் எல்லாவிதமான பயிற்சிகளும் பொருந்தக்கூடியவையா?

உண்மையில், உடற்பயிற்சி செய்வதால் மூளை மற்றும் இதயத்துக்கு ரத்தம் சீராகச் செல்கிறது. இதனால் ஆரோக்கியம் கூடும்; நினைவாற்றல் அதிகரிக்கும்; கவனக்குறைவு ஏற்படாது. ஆனால், உலக அளவில் ஆண்களில் 60 சதவிகிதம், பெண்களில் 74 சதவிகிதம் பேர்  உடற்பயிற்சி செய்வதில்லை என்கிறது அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்றின் தகவல். உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றிப் பேசும் அதேவேளையில் நாம் நமது வயதுக்கும் உடல்நிலைக்கும் ஏற்ற சரியான உடற்பயிற்சியைத்தான் செய்கிறோமா என்பதும் மிக முக்கியம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் என்னென்ன உடற்பயிற்சி செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று பார்ப்போமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick