உடலும் மனமும் இணையட்டும் ஒன்றாக!

ஹெல்த்

மனம்

* இயற்கையை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள்.

* செல்போனை அணைத்துவிட்டு பரபரப்பான உலகிலிருந்து சிறிது விலகி இருங்கள்.

* ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல், கவிதை எழுதுதல் போன்ற உங்களுக்குப் பிடித்த திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

* புத்தக வாசிப்புப் பழக்கம் நல்ல சிந்தனைகளுக்கு வழிவகுக்கும்.

* சிறு சிறு கைவினைப் பொருள்களைச் செய்து பாருங்கள்.

உணர்வு

* தியானம், மனதை ஒருநிலைப்படுத்தும்.

* உடல், மனம்... இரண்டுக்கும் சிறந்த பயிற்சிதான் யோகா.

* மனதை அமைதிப்படுத்தும் வாசனையான அரோமா மெழுகை ஏற்றுங்கள்.

* நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுங்கள்.

* பிடித்தமானவருடன் பிடித்ததைச் செய்யுங்கள்.

* தினமும் ஒரு புதிய செய்தியைத் தெரிந்துகொள்ளுங்கள்.

* அன்றைய நல்ல நிகழ்வுகளைப் பதிவுசெய்யுங்கள்.

உடல்


* நாள்தோறும் இருமுறை குளிக்கலாம்.

* செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடுங்கள். இதுதான் ஹேப்பி யோகா.

* சோர்ந்து இருப்போரைத் தட்டிக் கொடுங்கள்.

* வீட்டைச் சுத்தப்படுத்துவதும் ஒருவித பயிற்சிதான்.

* 30 நிமிட நடைப்பயிற்சியுடன் உங்கள் ஒவ்வொரு நாளும் தொடங்கட்டும்.

* ஓய்வு நேரத்தில் நீச்சல் அடிக்கலாம்... தசைகள் உறுதியாகும்.

* பிடித்த பாடலுக்கு நடனமாடுங்கள். இதற்கு முறைப்படி நடனம் தெரியவேண்டும் என்ற அவசியமில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick