ஸ்டார் ஃபிட்னெஸ் - நட்சத்ராவின் ஸ்லிம் சீக்ரெட்ஸ்!

இளநீர்... இயற்கை உணவு... இவற்றுடன் கொஞ்சம் எக்சர்சைஸ்!ஃபிட்னெஸ்

சிரித்த முகமும் கலகலப்புப் பேச்சுமாகத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மிளிர்பவர் நட்சத்ரா.

‘உ
ங்க ஃபிட்னெஸ் ரகசியம் சொல்லுங்க’ என்றதுமே உற்சாகமாகச் சிரிக்கிறார்.

“ஸ்லிம்மா இருக்குறதுதான் அழகுன்னு பலருக்கு எண்ணம். அழகா இருக்கணும்கிறதுக்காக  உடம்பை ரொம்ப வருத்திக்கிறாங்க. ஆனா, சைஸ் ஜீரோவா இருக்குறது அழகு கிடையாது. ஒல்லியா இருக்கணும்னு நிறைய கல்லூரிப் பொண்ணுங்க காலை, மதிய உணவுகளைத் தவிர்ப்பாங்க. ஏன்னு கேட்டா, குண்டாய்டுவோம்னு பயப்படுவதா சொல்லுவாங்க. இதுவே தப்புதான். சாப்பிடாம ஒல்லியா இருக்கிறது ஃபிட்னெஸ் கிடையாது.  நீங்க குண்டா இருந்தாலுமே ஓடியாடி வேலை செய்ய முடியணும், எவ்வளவு தூரம்னாலும் நடக்க முடியணும். அப்படியிருந்தாலே ஆரோக்கியமா இருக்கோம்னுதான் அர்த்தம். அந்த ஆரோக்கியம்தான் உண்மையான உடல் அழகு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick