எனர்ஜி தரும் எளிய பயிற்சிகள்..!

பிருந்தா ஆனந்த் பிசியோதெரபிஸ்ட்

ண் விழித்தது முதல் உறங்கும்வரை அன்றாடப் பொழுதுகளில் வேலை, பயணம் என நாம் கடந்துசெல்கிறோம். நாள் முழுவதும் இப்படியான இடைவிடாத நேரங்களில் நாம் செயல்பட எனர்ஜி தேவைப்படுகிறது. இந்த எனர்ஜியை உணவு மூலமாக மட்டுமல்ல, உடற்பயிற்சியின் மூலமாகவும் பெற முடியும். உடலுக்கு எனர்ஜி தரக்கூடிய எளிய பயிற்சிகளை இங்கே பார்ப்போம்...

பைசைக்கிள் க்ரன்ச் (Bicycle Crunch)
 
விரிப்பில், மல்லாந்து படுக்க வேண்டும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் தலையின் அடியில் வைத்துக்கொள்ள வேண்டும். கால்கள் இரண்டையும் மடக்கவும். இப்போது, மேல்உடலைச் சற்று உயர்த்தி, வலது கை மூட்டின் மூலம் இடது முழங்கால் மூட்டினைத் தொடுமாறு செய்ய வேண்டும். இதேபோல் இடது கை - வலது காலுக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இந்தப் பயிற்சியை 10 முறை செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick