முதுமையில் தடுமாற்றம்... முன் எச்சரிக்கை அவசியம்!

லக்ஷ்மிபதி ரமேஷ், முதியோர் நல சிறப்பு மருத்துவர்

குழந்தைகளைப் போலவே அதிக அக்கறையுடனும் கவனத்துடனும் பார்த்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள் முதியவர்கள். முதுமையின் காரணமான இயல்பான உடல் தளர்வும் பலவீனமும் மனதளவிலான வருத்தங்களும் அவர்களை ரொம்பவே ஆட்டிப்படைக்கும். முதியவர்கள் அடிக்கடி தடுமாறிக் கீழே விழுவது சகஜம். குறிப்பாக, அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு இத்தகைய தடுமாற்றம் நேரலாம். இந்தத் தடுமாற்றம் எப்போதோ நிகழ்ந்தால் பரவாயில்லை. ஆறு மாதங்களில் இரண்டு தடவை நடக்குமேயானால், எச்சரிக்கை அடைய வேண்டும். `வயசானா... இதெல்லாம் சகஜம்தானே?’ என்றோ, `ஓர்  இடத்துல இருந்தாத்தானே... வயசுப்பிள்ளை மாதிரி துள்ளிக்கிட்டு ஓடுனா... இப்பிடித்தான்’ என்றோ பேசிவிட்டுக் கடந்துவிடக்கூடாது. முதுமையில் வரும் இயலாமையின் காரணமாக ஏற்படும் இந்தத் தடுமாற்றத்தைக் கவனிக்க வேண்டும். இந்தத் தடுமாற்றத்தைச் சிலர் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்; வேறு சிலரோ பயம் காரணமாக அப்படியே விட்டு விடுவார்கள். அதாவது, டாக்டரிடம் போனால் எக்ஸ்-ரே, ஸ்கேன், மருந்து மாத்திரை என்று பெரிய சோதனைக்குத்  தன்னை ஆட்படுத்திவிடக்கூடாதே என்றும், செலவு வைத்துவிடக்கூடாதே என்றும் தடுமாற்றத்தைக் கடந்து சென்று விடுவார்கள்.

இரண்டு வகை!

முதுமையில் ஏற்படும் தடுமாற்றத்தை உடல்ரீதியான பிரச்னை என்றும், சுற்றுப்புறச் சூழல் காரணமாக ஏற்படும் பிரச்னை என்றும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

உடல்ரீதியான பிரச்னை என்றால், வயோதிகத்தால் ஏற்படும் பலவீனம். கால்சியம் சத்துக்குறைபாட்டால் எலும்பு மூட்டுகள் பலவீனமாதல், மூட்டு வலி, இதய நோய், சர்க்கரை நோய், தைராய்டு, தசைப்பிடிப்பு, பார்வைத்திறன் மங்குதல், நோய்க்குறைபாடுகளுக்காக மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதால் வரக்கூடிய மயக்கம், தலைசுற்றல், கால் தட்டையாக இருத்தல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick