பாஸ்... இது ‘ஆண்ட்ரோபாஸ்’

ஜெயஸ்ரீ கோபால், நாளமில்லாச் சுரப்பி மருத்துவர்ஹெல்த்

‘மெனோபாஸ்’ (Menopause). மாதவிலக்கு, முற்றிலுமாக நின்றுவிடும் கட்டத்தையே `மெனோபாஸ்’ என்பார்கள். இது பெண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடியது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இம்மாதிரியான நிலை ஆண்களுக்கும் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்றால், அது கேள்விக்குறியே. ஆண்களுக்கு ஏற்படக்கூடிய மெனோபாஸை `ஆண்ட்ரோபாஸ்’ என்பார்கள்.

`ஆண்ட்ரோபாஸ்’ பற்றி அறிந்துகொள்வதற்குமுன் `டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) ஹார்மோன் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். ஆண்களின் உடலில் சுரக்கக்கூடிய, ஆண்களுக்கான முக்கியப் பாலியல் ஹார்மோனான இது, விந்தகத்தில் சுரக்கிறது. ஆண்களின் உடல் மற்றும் முகத்தில் முளைக்கும் முடி, எலும்புகளின் அடர்த்தி,  தசைப் பருமன், வலிமை, பாலியல் நாட்டம், விந்தணுக்களின் உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு முக்கியமானது. ஒற்றை வரியில் சொல்வதென்றால் ஆண்கள் ஆண் தன்மையோடு இருப்பதற்குக் காரணமே `டெஸ்டோஸ்டிரோன்’ ஹார்மோன்தான். பொதுவாக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு  ‘டெஸ்டோஸ்டிரோன்’ அளவு குறைவாக இருக்கும். இந்த நிலையே  ‘ஆண்ட்ரோபாஸ்’ (Andropause) எனப்படுகிறது. அதேநேரத்தில் `ஆண்ட்ரோபாஸ்’ காலகட்டம் அவரவர் உடல்நிலையைப் பொறுத்து 50 வயதிலோ, அல்லது அதன் பிறகோகூட அமையலாம். 

தீர்வுகள் (வாழ்வியல் மாற்றங்கள்)

* ஆரோக்கியமான உணவுகளை உண்பது
* கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது
* எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்வது
* தினமும் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல்
* உடல்பருமன், சர்க்கரைநோய், மனஅழுத்தம் தவிர்த்தல்
* 7 மணி நேரம் தூக்கம் அவசியம்
* சரியான நேரத்துக்கு உணவு உண்ணுதல்
* போதிய அளவு ஓய்வெடுத்தல்
* தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்வது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick