ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! | Health Apps - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

அன்பும் அக்கறையும்!

“என்னடா பண்ணுது உடம்புக்கு.. இத சாப்பிடு”, “காய்ச்சலா? ரசம் வெச்சு தரேன்”... அன்புடனும், அக்கறையுடனும் நமக்கு என்ன தேவையோ அதைச் சமைத்துக் கொடுப்பார்கள் பாட்டிகள். இப்போது எந்த உணவு, எதற்காக என்பதே பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. அதற்கு உதவுகிறது 10 Best Foods for You என்ற ஆப். மின்னும் தோலுக்கு இந்த 10 உணவுகள், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த 10 உணவுகள் என ரக வாரியாக ரெகமெண்ட் செய்கிறது. எளிமையாக எடை குறைப்பது எப்படி - என்ற பி.டி.எஃப் புத்தகமும் இந்த ஆப்-உடன் இலவசமாகக் கிடைக்கிறது. கொஞ்சம் மேற்கத்திய வாசனை அடித்தாலும், இந்த ஆப் சொல்லும் ரெசிப்பிகளைச் செய்யத் தேவையான பொருள்கள் தெருமுனை சூப்பர் மார்க்கெட்டிலே கிடைக்கும். இந்தியர்கள் மத்தியிலும் ஹிட் அடித்திருக்கும் இந்த ஆப், ப்ளே ஸ்டோரில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கிறது.

https://play.google.com/store/apps/details?id=com.andromo.dev136619.app203387

- கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick