ஆக்டோபஸ் போல புடைக்குதே இதயம் - இது புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்!

ஆனந்த் ஞானராஜ் - இதயவியல் நிபுணர்ஹெல்த்

- ஆனந்த் ஞானராஜ், இதயவியல் நிபுணர்

பெண்கள் இயல்பிலேயே அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அதனால்தான் ‘புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்’  பெண்களையே அதிகம் தாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதென்ன ‘புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்’?

நேசித்த ஒருவரின் இழப்புச் செய்தியைக் கேட்டவருக்கும் அந்த நொடியிலேயே துக்கம் தாங்காமல் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அதுதான் ‘புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்’. ஆசிய மக்களில் 50 சதவிகிதத்தினருக்கு இந்தப் பிரச்னை இருப்பதாகவும், அதில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் என்றும் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

யார் யாருக்கு எப்போது இந்தப் பாதிப்பு ஏற்படும் என்பது பற்றியெல்லாம் விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் ஆனந்த் ஞானராஜ்.

புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்

இதயத்தில் தற்காலிகமாக ஏற்படும் பாதிப்பினை ஸ்ட்ரெஸ் இண்டியூஸ்டு கார்டியோ மையோபதி (stress-induced cardiomyopathy) அல்லது டேகாட்சுபோ கார்டியோமையோபதி (takotsubo cardiomyopathy) என்று அழைக்கலாம். இதயத்தின் ஒரு பகுதி மட்டும் ஆக்டோபஸ் போலப் பெரிதாக புடைத்துவிடுவதைக் குறிப்பதுதான் ஜப்பானிய வார்த்தையான ‘டேகாட்சுபோ’

இந்தப் பிரச்னை ஏன் ஏற்படுகிறது?

அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் மற்றும் உடலியல் காரணிகள் என இரண்டு விதமான காரணங்களால் புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் ஏற்படும். மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களின் இறப்பு, திடீர் வேலையிழப்பு, விவாகரத்து, எதிர்பாராத, ஏற்றுக்கொள்ள முடியாத ஏமாற்றங்கள் என மன அழுத்தத்தை அதிகரிக்கக் கூடிய சம்பவங்கள்தான்  முக்கியக் காரணங்கள். அதிகப்படியான மகிழ்ச்சித்தரக்கூடிய விஷயங்களும் இந்த உணர்ச்சிவசப்படுதலில் அடங்கும். இவை தவிர,  பக்கவாதம், வலிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், அதிகப்படியான உதிரப்போக்கு போன்றவற்றால் கூட புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் ஏற்படலாம்.
 
அதிகப்படியான மனஅழுத்தம் ஏற்படும் போது, மூளையில் சுரக்கக்கூடிய ‘மன அழுத்த’ ஹார்மோனான ‘அட்ரினலின் மற்றும் நாரட்ரினலின்’ சுரப்பு அதிகரிக்கிறது. விளைவு புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்.

நாய் துரத்துதல், முதல்முறை விமானப் பயணம், பல பேர் முன்னிலையில் பேச வேண்டிய சூழ்நிலை போன்ற பல விஷயங்களால் நமக்குப் படபடப்பு, பயம், நெஞ்சுப் பிடிப்பு போன்றவை ஏற்படும். அப்போதெல்லாம் அட்ரினலின் சுரப்பு அதிகமாகிறது என்று அர்த்தம். இது அதிகமாகும்போதே பிரச்னை ஏற்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick