டாக்டர் டவுட்: குழந்தைகளின் சிறுநீரகப் பிரச்னைகள்

சுதா, குழந்தைகளுக்கான சிறுநீரகவியல் மருத்துவர்ஹெல்த்

னிதனின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம் சிறுநீரகங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மனிதனின் உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரைச் சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பணியைச் செவ்வனே செய்யக்கூடியது சிறுநீரகம். அதிலும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்கள்தான் ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரித்துச் சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியைச் செய்கின்றன. சிறுநீரகங்கள் இவைதவிர மேலும் பல பணிகளையும் செய்துவருகின்றன.

இப்படியிருக்க, பெரியவர், சிறியவர், பெண்கள் எனப் பாகுபாடில்லாமல் சிறுநீரகப் பாதிப்புகள் வந்து பாடாய்ப்படுத்துகின்றன. உணவு, தண்ணீர் எனப் பல்வேறு காரணங்களால் சிறுநீரகப் பாதிப்புகள் உண்டாகின்றன. இங்கே, குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகப் பாதிப்புகள் பற்றிப் பார்ப்போம்.

சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படுத்த அறுசுவைகளில் ஒன்றான உப்பு ஒரு காரணமா?

இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என அறுசுவை நிறைந்தது உணவு. நாம் உண்ணும் உணவு சுவை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வதே உடல் நலத்துக்கு உகந்தது.  எனவே சிறுநீரகங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் உப்பை ஒரு குறிப்பிட அளவே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். ஒரு நாளைக்குச் சுமார் 2 – 3 கிராம் அளவு சோடியம் உடலில் சேருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, சுமார் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ளலாம். அதேநேரத்தில் நாம் உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வதோடு, பதப்படுத்தப்பட்ட உணவுகளையும்  உணவகங் களில் சாப்பிடுவதையும் குறைத்துக்கொள்வது நல்லது.

உப்பு குறைவான ஆரோக்கியமான உணவுகளும், உடற்பயிற்சிகளும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். மாறாக, உப்பை அதிக அளவு எடுத்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் அதிகரித்துத் தீவிர சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஆரோக்கியமான இளைஞர்கள் நாளொன்றுக்கு 2,300 மில்லிகிராம் அளவு சோடியம் உட்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick