நேரத்துக்குச் சாப்பிடுங்க!

ஹெல்த்

காலை உணவு - 7 மணி முதல் 8 மணிக்குள். 10 மணிக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

காலை உணவு என்பது, அந்த நாளைத் தொடங்குவதற்கான எனர்ஜியைத் தரக்கூடியது. பிரேக்ஃபாஸ்டை, கிக் ஸ்டாட்டர் என்றே சொல்லலாம். மூளைக்கு ஆற்றலைத் தரும். உடலின் இயக்கத்துக்கு உதவக்கூடியது. அவசரமாகக் கிளம்பும் சூழலில், காலை உணவைப் பலர் தவிர்ப்பார்கள். இப்படித் தவிர்ப்பதால், தலைவலி, அசிடிட்டி, உடற்பருமன் போன்ற பிரச்னைகள் வரும்.

காலை உணவைத் தவிர்ப்பவர்கள், மதிய உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள நேரிடும்.

உணவு: தோசை, சப்பாத்தி, பொங்கல், காய்கறி உப்புமா, பூரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick