சிரிச்சா போச்சு! - இது கிளவுன் தெரபி!

‘`வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்!’’

- இந்தச் சொலவடையைச் சொல்லாத ஆட்களே நம்மில் யாருமில்லை. சிரிக்க வைத்தே நோயைக் குணமாக்கலாம் என ‘ரெமோ’ சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சொல்கிறார்கள்  லிட்டில் தியேட்டர்ஸைச் சேர்ந்த நாகரிகக் கோமாளிகள். ஆம். கிளவுன் தெரபி (Clown Therapy) எனப்படும் இந்த வித்தியாச சிகிச்சை முறை இப்போது சென்னையின் சில மருத்துவமனைகளில் பாப்புலர்.

 அதைப்பற்றித் தெரிந்துகொள்ள எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றோம்.

உள்ளே நுழைந்ததும், ‘இது மருத்துவமனையா...  மாண்டிசோரி பள்ளியா?’ என்ற குழப்பம்..... எங்கும் உற்சாகமான சிரிப்பொலி.  தக்காளி, செர்ரிப் பழங்களைப் போன்ற பபூன் மூக்கு மற்றும்  விநோதமான காஸ்ட்யூம்களோடு  நம்மை வரவேற்கிறார்கள் நோயாளிகளுக்குக் கிளவுன் தெரபி  சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்த ‘லிட்டில் தியேட்டர்ஸ்’ குழுவினர். 90களின் ஆரம்பத்திலேயே வெளிநாடுகளில் பிரபலமாகிவிட்ட கிளவுன் தெரபியை தமிழ்நாட்டில் பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறார்கள் இந்தக் குழுவினர். டாக்டர் ரோஹிணி ராவ் மற்றும் அவரின் அம்மா ஆயிஷா ராவ் இருவரும் இதைப் பெரும் முனைப்புடன் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick