டாக்டரைக் குழப்பாதீங்க! | Doctor patient relationship problems - Doctor Vikatan | டாக்டர் விகடன்

டாக்டரைக் குழப்பாதீங்க!

கே.ராமன் - மனநல மருத்துவர்

முன்பெல்லாம் ஏதாவது நோய் வந்தால், மருத்துவரிடம் செல்வோம். மருத்துவர் நம்மைப் பரிசோதித்துவிட்டு சில மாத்திரை, மருந்துகளைத் தருவார். நமக்கு அந்த நோயைப் பற்றியோ மருந்தைப் பற்றியோ ஏதும் தெரியாது. ஆனால், மருத்துவர் மேல் இருந்த நம்பிக்கையில் சிகிச்சை பெற்றோம். குணமும் அடைந்தோம். இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில், அனைத்துத் தகவல்களும் நம் விரல் நுனியில் கிடைக்கின்றன. என்ன பிரச்னை என்றாலும், உடனே நாமே அதை கூகுளில் தேடித் தெரிந்துகொள்கிறோம். அது உடல்ரீதியான பிரச்னையாக இருந்தாலும் சரி, உளவியல் ரீதியான பிரச்னையாக இருந்தாலும் சரி... அனைத்துக்கும் பதில்களை ‘கூகுள் ஆண்டவரே’ கூறிவிடுகிறார்.

தற்போது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் என்ன நோய் என அறிந்துகொள்ள வருவது இல்லை. தாங்கள் அறிந்ததை உறுதி செய்துகொள்ளவே வருகிறார்கள். இது எந்த அளவுக்கு வசதியானதோ, அதே அளவுக்குப் பிரச்னை தரக்கூடியதும்கூட!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick