கன்சல்ட்டிங் ரூம்

-கே.திவ்யா, காரைக்குடி

‘‘பல மொழி கற்றல் குழந்தைகளுக்குச் சாத்தியமா?’’

எங்கள் 5 மாதக் குழந்தை நாங்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்து பதில் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறான். பலரும் பல மொழிகளில் பேசினால், குழந்தைகள் குழம்பிப் போவார்களா? குழந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கலாமா? எப்படிக் கற்பிப்பது?’’


சுனில்குமார்,
மனநல ஆலோசகர், சென்னை.


``பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளால் மொழியை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். ஒரே நேரத்தில் 5 மொழிகளைக் கற்றுக் கொள்ளக்கூடிய திறன் குழந்தைகளுக்கு இயற்கையிலேயே உண்டு. ஒரு வயதுக் குழந்தையிடம் எத்தனை மொழிகளில் பேசினாலும், அவையெல்லாம் வேறு வேறு மொழிகள் என்பதைப் பிரித்தாளும் திறமை அதனிடம் உண்டு.

நாம் பேசும் பேச்சுகள் ஒவ்வொன்றும் மூளையின் பகுதிகளில் பதியப்பட்டு, நமக்குத் தேவைப்படும்போது பேச்சாக வெளிப்படுகிறது. அப்பகுதிகளின் செயல்பாடு குறைவாக இருந்தால் மொழியைக் கற்பதில் குழந்தைகளுக்குப் பிரச்னை ஏற்படுகிறது; பேசவும் தாமதம் ஆகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick