நான் வளர்கிறேனே மம்மி! - கர்ப்ப காலம் A to Z | Pregnancy Stages Month-by-Month - Food to be taken - Doctor Vikatan | டாக்டர் விகடன்

நான் வளர்கிறேனே மம்மி! - கர்ப்ப காலம் A to Z

ர்ப்பகாலம்... நிறைய அன்பையும், பெரிய பொறுப்பையும் பெண்கள் சுமக்கும் சுகானுபவம். ஒரு கருவை உயிராக வளர்க்கும் அந்தக் காலகட்டத்தில், ஒவ்வொரு மாதத்திலும் நிகழும் சிசுவின் வளர்ச்சி மற்றும் தாயின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பன பற்றி விளக்கமாகச் சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஹேமலேக்கா.

முதல் மூன்று மாதங்கள்!

முறையான மாதவிலக்கு சுழற்சி இருப்பவர்களுக்கு மாதவிலக்கு ஒரு வாரத்திற்கு மேல் தள்ளிப் போயிருந்தால், கர்ப்பம் அடைவதற்கான சாத்தியக்கூறுகளை முன்னிறுத்தி சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, வயிற்றில் ஒருவித அழுத்தம், மார்பகம் சற்று மென்மையானது போலவும், பெரிதானது போலவும் உணர்வது, சோர்வு, குமட்டல், வாந்தி... இவற்றையெல்லாம் கர்ப்பத்துக்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick