பிஞ்சுகளைப் பாதிக்கும் மஞ்சள்காமாலை

ஹெல்த்எஸ்.சுப்ரமணியன், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்

ஞ்சள்காமாலை... பெயரைக் கேட்டாலே பலரை அதிரவைக்கிற ஒரு நோய். மஞ்சள்காமாலை வந்து, நோய் முற்றி, கல்லீரலைப் பாதித்து அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை நிறைய பார்த்துவிட்டதாலோ என்னவோ, இந்த நோய் பற்றிய கிலி நம்மை அவ்வளவு சீக்கிரத்தில் விடுவதில்லை. அதிலும் குறிப்பாகப் பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை வரும்போது, அது பெற்றோரை அச்சத்தின் உச்சத்துக்கே கொண்டுசென்றுவிடுகிறது.

``பிறந்த குழந்தைகளுக்கு வருகிற மஞ்சள்காமாலை குறித்துப் பயம் தேவையில்லை. தேவையெல்லாம் விழிப்புஉணர்வு மற்றும் மருத்துவர்களின் கண்காணிப்பு மட்டுமே’’ என்கிறார் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான எஸ்.சுப்ரமணியன். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படுகிற மஞ்சள்காமாலை குறித்து மருத்துவர் தந்த விழிப்புஉணர்வுத் தகவல்கள் இதோ...

``மஞ்சள்காமாலையில் நேரடி மஞ்சள்காமாலை, மறைமுக மஞ்சள்காமாலை என்று இரண்டு வகைகள் உள்ளன. கல்லீரல் சரியாக வேலை செய்யாமல் இருப்பது, மற்றும் நோய்த்தொற்று போன்றவை காரணமாக ஏற்படுகிற மஞ்சள்காமாலை நேரடி மஞ்சள்காமாலை. அப்படியில்லாமல், பிறந்த குழந்தைக்கு ஏற்படுகிற மஞ்சள்காமாலை மறைமுக மஞ்சள்காமாலை. தாயின் வயிற்றில் இருந்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வெளி உலகத்துடன் இணைந்து வாழ, தன்னை மாற்றிக்கொள்ளும். அப்படியானதொரு நிகழ்வுதான் மஞ்சள்காமாலை. பிறந்ததும் குழந்தையின் உடல் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் மிக இயல்பான நிகழ்வு இது. சொல்லப்போனால், இந்தப் பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்த நிகழ்வைச் சந்தித்துவிட்டுத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பிக்கும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick