தற்கொலைகளைத் தடுக்கும் ஸ்பைடர் | Suicide Prevention Technology in Future - Doctor Vikatan | டாக்டர் விகடன்

தற்கொலைகளைத் தடுக்கும் ஸ்பைடர்

ஹெல்த்

வ்வொரு வருடமும் ஏறத்தாழ 8,00,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். கிட்டத்தட்ட 40 நொடிகளுக்கு ஒருவர் இறந்து போகின்றார். தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்களின் எண்ணிக்கை இதேபோல் 20 மடங்கு அதிகம். இது உண்மையான எண்ணிக்கையில் ஒரு பகுதி மட்டுமே. தற்கொலையைத் தவிர்க்கும் வழிகள் பற்றிப் பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப்போவதை முன்னரே அறிந்து தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மன அழுத்தம், கடன் தொல்லை, தீராத நோய், பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் தற்கொலை செய்துகொள்வதற்கான ஆபத்து அதிகம் உள்ளவர்கள். இவர்களுக்கு இரவில் சரியாக உறங்காமல் இருத்தல், மன அழுத்தம், தனிமையாக இருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தற்கொலை நோக்கம் இருப்பதாக அளவிடுவார்கள். உளவியல் மருத்துவர்கள் பரிசோதனைகள் மூலமாகத் தற்கொலை செய்வற்கான நோக்கம் உள்ளதைக் கண்டறிவர். ஆனால், இந்த வகையில் கண்டறியும் முடிவுகள் 50 சதவிகிதம்கூடச் சரியாக இருப்பதில்லை. மன அழுத்தம் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்ள வெறும் ஆறு சதவிகிதம்தான் வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick