மனதாரச் சாப்பிடுவோம்

அனிட், பியாட்ரிஸ் உணவியல் நிபுணர்ஹெல்த்

‘எதையும் நிறைவாக, திருப்தியாகச் செய்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர். இன்றைய நெருக்கடியான, பரபரப்பான வாழ்க்கைச்சூழல் அதற்கு இடம் கொடுப்பதில்லை என்பதே யதார்த்தம். சாமி கும்பிடுவது தொடங்கிச் சாப்பிடுவது வரை எதையும் நம்மால் மனநிறைவோடு, ஒருமுகப்படுத்திய மனதோடு செய்ய முடிவதில்லை. அதற்குக் காரணங்களாகக் குடும்பம், வேலைச்சூழல், பரபரப்பு... என நீள்கிறது பட்டியல். இப்படி எதையாவது சிந்தித்துக்கொண்டேதான் ஒவ்வொரு நொடியையும் கடக்கிறோம். சாப்பிடும் நேரம்கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பது நாம் வருத்தப்பட வேண்டிய செய்தி.

யாராவது நம்மிடம் `காலையில என்ன சாப்பிட்டீங்க?’ என்று கேட்டால், ஏதோ கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டு விட்டதுபோல் நம்மில் பலரும் விழிப்போம். சாப்பிட்டுவிட்டுத்தான் வந்திருப்போம். என்ன சாப்பிட்டோம் என்பது நினைவில் இருக்காது. எல்.கே.ஜி-யில் படித்த ரைம்ஸ்கூட கேட்டதும் நினைவுக்கு வந்துவிடும். காலையில் சாப்பிட்ட டிபன் என்ன என்பதை மறக்கிற அளவுக்கு நாம் வாழும் சூழல் நம்மை அப்படியே மாற்றியிருக்கிறது. சாப்பிடும்போது கவனத்தை உணவின் மீது குவிக்காமல், வேறு எதன்மீதோ செலுத்துவதுதான் அதற்குக் காரணம். இது சாதாரணப் பிரச்னை அல்ல.

``உணவில்  கவனமில்லாமல் ஏனோ தானோ என்று சாப்பிடுவதால்தான் இன்று பல்வேறு நோய்கள் உண்டாகின்றன’’ என்கிறார் உணவியல் நிபுணர் அனிட் பியாட்ரிஸ். அத்துடன், உணவை  மனநிறைவோடு, மகிழ்ச்சியாகச் சாப்பிடுவதன் (Mindful eating) அவசியம் குறித்தும் விரிவாக விளக்குகிறார் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick