வெற்றிலை... அது வெள்ளிலை!

ஜீவா சேகர், இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர்ஹெல்த்

வெற்றிலை... வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, நாகவல்லி, நாகினி, வேந்தன்,  தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் தெய்வீக மூலிகை இது. ‘Piber betel’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை என மூன்று வகைகள் உள்ளன.

வெற்றிலை பற்றி 1,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டுகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பண்டைக்காலத்துப் பெண்களின் அழகுசாதனப் பொருள்களில் வெற்றிலைக்கு முக்கிய இடம் உண்டு.

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள வெற்றிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சவிக்கால் (Chavicol) என்ற பொருள் உள்ளது. வெற்றிலை, வெப்பத்தை உண்டாக்கும்; உமிழ்நீரைப் பெருக்கும்; வாய்நாற்றம் போக்கும், பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்க உதவும்;   ஆண்மைக்குறைவை நீக்கும். இலைச்சாறுடன் தேவையான அளவு தண்ணீர், பால் சேர்த்துக் குடித்து வந்தால் தங்குதடையின்றிச் சிறுநீர் வெளியேறும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick