எல்லோரும் டாக்டர் ஆகிட்டிருக்கோம் பாருங்க!

நவம்பர் 14-20 உலக ஆன்டிபயாடிக் விழிப்பு உணர்வு வாரம்சரவணன், குழந்தைகளுக்கான சிறப்பு ஹோமியோபதி மருத்துவர்ஹெல்த்

1900-களில் நல்லா இருக்கிற மனிதர்கள் திடீர்னு வரும் காய்ச்சல், வயிற்றுப் போக்குகளால் ஸ்வாகா ஆகிக்கொண்டிருந்தனர். எதுக்கு சாவுறாங்கன்னே தெரியாம வைத்தியர்கள் குழம்பிக்கிடந்த நேரம். ஹிப்போக்ரேடிஸ், மனிதர்களின் நோய்க்குக் காரணம் விஷக்காற்றுன்னு சொல்லிவெச்சிருந்தார். இன்னொரு பக்கம் மதவாதிகள் டிசைன் டிசைனா காரணம் சொல்லிக் குழப்பிக்கிட்டிருந்தாங்க.

அதுக்கும் 40 வருஷத்துக்கு முன்னாடி 1855 வாக்கில், லூயிஸ் பாஸ்டர்ங்கிற பிரெஞ்சுக்காரர், ‘பால் ஏன்டா கெட்டுப் போகுது’ன்னு மண்டையைப் பிச்சு ஒரு வழியா ‘ஏதோ ஒண்ணு பாலைக் கெட வைக்குது, அதைச் சூடு பண்ணுனா கெட்டுப் போகலை’ன்னு கண்டுபிடிச்சு வெச்சிருந்தார். ‘வைன்’ கெட்டுப்போறதையும் அவரால தடுக்க முடிஞ்சுது. அப்போதைய ஹீரோ அவர்தான்.

திரும்ப 1900. ஏதோ ஒரு காய்ச்சலில் ஆடு, மாடு, மனிதர்கள்னு அத்தனையும் காலி. இப்பவும் விஷக் காற்று, கடவுளின் சாபம்னு பீலா விட்டுக்கிட்டிருந்த மதவாதிகளுக்கு மத்தியில `ராபர்ட் கோச்’ங்கிற ஜெர்மன்காரர், `இருங்கடா, பாஸ்டர் சொல்றதை வெச்சுப் பார்த்தா, கண்ணுக்குத் தெரியாத கிருமி இருக்கும்போலிருக்கு. நான் ஆராய்ச்சி பண்ணிச் சொல்றேன்’னு சொன்னாரு. ஆந்த்ராக்ஸ் என்னும் நுண்கிருமி இருப்பதையும் அதுதான் அத்தனை சாவுக்கும் காரணம்னும் கண்டுபிடிச்சார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick