டாக்டர் டவுட் - தைராய்டு புற்றுநோய்

ஹெல்த்

வீன மருத்துவ ஆராய்ச்சிகளின் விளைவாலும் தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும் புற்றுநோயைக்  குணப்படுத்த முடியும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், அதற்குத் தொடக்க நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிய வேண்டும். மக்கள் மத்தியிலோ புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு போதிய அளவில் இல்லை.

புற்றுநோயில் பல வகைகள் இருக்கின்றன. மனித உடலில் பல பாகங்களிலும் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது என்கிறது மருத்துவம். ஆனால், பல தருணங்களில் புற்றுநோய் என்றே உணராமல் பலர் முற்ற விட்டுவிடுகிறார்கள். அப்படிக் கண்டுகொள்ளாமல் விடப்படும் புற்றுநோயில் முதன்மையானது தைராய்டு புற்றுநோய். இதை, சாதாரணக் கழுத்து வீக்கம் என்று நினைத்துப் பலர் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது, சுளுக்கு எடுப்பது என எளிதாகக் கருதி விடுகிறார்கள்.

 ஆண்,பெண் வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலானோரைப் பாதிக்கக்கூடிய தைராய்டு புற்றுநோய் பற்றிப் போதிய விழிப்பு உணர்வு உருவாகவில்லை. அதே நேரம் தைராய்டு புற்றுநோய் பற்றிய பல தவறான நம்பிக்கைகளும் உள்ளன. குறிப்பாக, எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்தால்கூட தைராய்டு புற்றுநோய் வந்துவிடும் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. இந்தப் புற்றுநோய் வந்தால், தைராய்டு சுரப்பியை நீக்கி விடுவார்கள் என்றும் அப்படி நீக்கினால் சீக்கிரமே மரணம் ஏற்படலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.  எனவே, தைராய்டு புற்றுநோய் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தைராய்டு பிரச்னை என்றால் என்ன, அது எதனால் வருகிறது, என்னென்ன அறிகுறிகள், அதற்கான சிகிச்சைகள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick