இன்னல் தீர்க்குமா இம்யூனோதெரபி?

ஹெல்த்

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட்டில் வெளியான ஒரு படம் ‘தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’. கேன்சரால் பாதிக்கப்பட்ட இருவரின் வலிகளைக் காதலோடு சொன்ன திரைப்படம்.  அதில் இப்படி ஒரு காட்சி வரும்.

அழகான புல்வெளியில் ஒருவர் தோள்மீது ஒருவர் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருப்பர்.

“என் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி... ஆனால், அது மேலே மட்டுமே போகக் கூடியது.”

“தெரியும். ஆனால், உன்னுடைய அந்தப் பயணம் முழுக்க உன்னோடு வருவதில் எனக்கு மகிழ்ச்சி.”

“நான் போராடுவேன். உனக்காக இந்தக் கேன்சரை எதிர்த்துக் கடுமையாகப் போராடுவேன். நாம் வாழ்வோம்” என்று அந்த நாயகன் சொன்ன சில நாள்களிலேயே அவனைக் கேன்சர் கொன்றுவிடும். அவள் கேன்சரோடு தனியாகப் போராடிக் கொண்டிருப்பாள். கேன்சரின் வலியைவிடவும் கேன்சருக்கான மருத்துவ முறைகள் எவ்வளவு வலி மிகுந்தவை என்பதை எடுத்துரைக்கும்  படம்  அது. கேன்சரின் வலியை நேரடியாக அனுபவிக்காவிட்டாலும் கூட, ஏதோ ஒரு வகையில் நாமும் அந்த வலிகளைப் பார்த்துக் கடந்திருப்போம்.

கேன்சர், மனிதர்களை அச்சுறுத்தும் ஒரு சொல். இந்த நோயை எதிர்க்க இதுவரை எத்தனையோ மருந்துகள், சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எதுவும் இந்த நோய்க்கான முழுமையான தீர்வை அளிக்கவில்லை. ஆனால், சமீபகாலமாக கேன்சர் சிகிச்சையில் புதுப்புரட்சியை ஏற்படுத்திவருகிறது ‘இம்யூனோதெரபி’.

“இம்யூனோதெரபியில் கேன்சர் செல்களுக்கோ கட்டிகளுக்கோ நாம் சிகிச்சை செய்வதில்லை. உடலின் எதிர்ப்பு சக்தியை உசுப்பிவிடுகிறோம். கேன்சர் செல்களுக்கு எதிராகக் கடுமையாகப் போராடச் செல்களின் எதிர்ப்பாற்றலை ஊக்கப்படுத்துகிறோம். உடலின் ‘ஷஎதிர்ப்பாற்றல் அமைப்பைச் சரி செய்துவிட்டால், அது எந்த வகையான கேன்சர் செல்களுக்கு எதிராகவும் போராடும். கேன்சர் ஆராய்ச்சியில் இது ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு. குறிப்பாக, நுரையீரல், கிட்னி கேன்சர், மெலனோமா கேன்சர் ஆகியவற்றிற்கு இது மிகச் சிறந்த தீர்வாக உருவெடுத்திருக்கிறது” என்கிறார் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர். பத்மனி ஷர்மா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick