‘மொழி’ ஜோதிகாவை உருவாக்கிய சந்திரா ரவி!

ஹெல்த்

ழுபது வயதாகிறது சந்திரா ரவிக்கு. சென்னை, அண்ணாநகரில் வசிக்கிறார். பிறந்ததிலிருந்தே செவித்திறன் இல்லாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இருந்தும் தன்னைத்தானே பார்த்துக்கொள்வதிலிருந்து பணிக்குச் செல்வது வரை, மற்றவர்களைப்போல இயல்பானதொரு வாழ்க்கை வாழும் தன் லட்சியத்தில் வெற்றியடைந்திருக்கும் தன்னம்பிக்கைப் பெண். தன் சம்பாத்தியத்தில் மகளைப் படிக்கவைத்து, திருமணம், பெரிய நிறுவன வேலை என அவரது வாழ்க்கையை அமைத்துக்கொடுத்து, தாய்மையின் கடமைகளையும் பூரணமாக முடித்தவர். மாற்றுத்திறனாளிகளுக்கான நம்பிக்கை ஊற்று.

நாம் காலிங் பெல்லை அடித்ததும், கனிவான புன்னகையுடன் கதவைத் திறந்தார் சந்திரா. அவர் சைகையால் பேசியதை நமக்காக மொழிபெயர்த்தார் அவரின் தங்கை விஜயா பாஸ்கர். இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிச் செய்திகளைக் காதுகேளா, வாய்பேச முடியாதவர்களுக்கான சைகை மொழியில் தருபவர். சந்திராவின் சைகைகளையும் நமக்காக மொழிபெயர்த்தார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick