எலும்பின் கதை! - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்ஹெல்த்

கை விரல்கள்... நம் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தீர்மானிக்கும் உறுப்பு இவைதாம்.  அதிலும் கட்டை விரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உடம்பில் அதிகம் பயன்படுத்தப்படுபவை கை விரல்கள்தாம்.  கை விரல்களில் அடிக்கடி உருவாகும் பிரச்னைகள் இரண்டு. அவை ‘Trigger Finger’ மற்றும் ‘De Quervain Tendinosis’.

கை விரல்கள்  சிறிய எலும்புகளால் ஆனவை. இந்த எலும்புகளைச் சுற்றிலும் மெல்லிய தசைப்படலம் சூழ்ந்துள்ளது. விரலின் மீதிருக்கும் நகங்கள் விரலின் உறுதிக்காக ஏற்படுத்தப்பட்டவை. ‘Trigger Finger’ என்பது, விரலின் எலும்புகள்மீதுள்ள தசைகள் உறைந்து கெட்டியாவதால் உண்டாகும் வலியைக் குறிப்பிடுவதாகும். விரல்களின் எலும்புமீது இருக்கும் தசைகள் கயிறு போன்று விரவி,  தசை நார்களாக இணைந்துள்ளன. அந்தத் தசை நார்களை ‘Tendons’ எனவும் அவற்றின்மீது உறைபோன்று இருக்கும் பாதுகாப்புக் கவசத்தை ‘Tendons Sheath’ என்றும் குறிப்பிடுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick