வெள்ளையில் இல்லை வில்லங்கம்

உணவு

ணவுகளைப் பற்றிப் பரவும் பல்லாயிரக்கணக்கான செய்திகளில் வெள்ளை நிற உணவுகளைத் தவிருங்கள் என்பதும் பிரபலமாகி வருகிறது.

வெள்ளை நிற உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும்  என்கிற எண்ணத்தில் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கத் தொடங்கிவிட்டனர் பலர். ஆனால் உண்மை என்னவென்றால், எல்லா வெள்ளை நிற உணவுகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பதில்லை.

வெள்ளைச் சர்க்கரை, தீட்டிய அரிசி போன்ற செயற்கையான உணவுப்பொருள்கள் தீங்கு விளைவிக்கும் என்பதை மறுக்க முடியாது. அதேநேரம் சில அத்தியாவசியமான சத்துகள் இயற்கையாகக் கிடைக்கும்  வெள்ளை நிற உணவுகளில்தான் நிறைவாக உள்ளன. அப்படிச் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்...

வெள்ளை வெங்காயம்

வெள்ளை வெங்காயத்தில் உள்ள சல்பர் வயது முதிர்வைத் தள்ளிப்போடும். மேலும் இது சளி, இருமல் வராமல் தடுக்கக் கூடியது. வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அல்லிசின் (Allicin) என்ற வேதிப்பொருள் கொலஸ்ட்ராலையும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick