மாயங்களை விளக்கும் மரபணுச் சோதனை!

எம். துரைராஜ், பொது மருத்துவர்ஹெல்த்

ரு குழுந்தை பிறந்ததும் அக்குழந்தையின் உருவ அமைப்பு பற்றித்தான் பெரும்பாலும் பேச்சு இருக்கும். அப்பாவைப்போல காது, அம்மாவைப்போல கண்ணு, தாத்தாவைப்போல சிரிப்பு எனப் பேச ஆரம்பித்து விடுவார்கள். இதற்குக் காரணம் டி.என்.ஏ (Deoxyribonucleic acid). அனைத்து  உயிரினங்களும் டி.என்.ஏ என்கிற மூலப்பொருள்களைக்கொண்டே உருவாகின்றன. டி.என்.ஏ-வில் உள்ள மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதிகள் மரபணு எனப்படும். மரபணு- மரபு+அணு. மரபு என்பது வழி வழியாக வருவது. பரம்பரையாக வரும் மரபுப் பண்புக்குக் காரணமாக இருக்கும் உயிர்மத்தின் பெயர்தான் மரபணு.

மரபணுச் சோதனையின் மூலம் ஒருவருடைய பரம்பரை, இனம், வரக்கூடிய நோய்கள், ஒருவரின் குணாதிசயம் அல்லது பிறக்கப்போகும் குழந்தையின் குணாதிசயம் போன்றவற்றைக் கண்டுபிடிக்கலாம். கொலை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சரியான குற்றவாளியைக் கண்டறிய மரபணுச்  சோதனை செய்யப்படுகிறது. மரபணுச்  சோதனைக்கு ஒரு நபரின் ரத்தம், முடி, தோல், ஆம்னியாட்டிக் திரவம் (கர்ப்பக்காலத்தின்போது குழந்தையைச் சுற்றியுள்ள திரவம்)அல்லது திசு போன்ற ஏதேனும் ஒன்று மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகிறது. பெரும்பாலும் ரத்த மாதிரியே சோதனைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick