அல்சைமர் விழிப்பு உணர்வுக்காக ஒரு மாரத்தான் ஓட்டம்!

ஹெல்த்

கொஞ்சம் கொஞ்சமாய் மூளையின் செல்களைச்  சிதைத்து, ஞாபகசக்தியைக் குறைத்து, நம்மை நமக்கே மறந்துபோகச் செய்துவிடும் நோய் அல்சைமர். வயதானவர்களை அதிகம் பாதிக்கும் இந்நோயைப் பற்றி 1906-ல் ஜெர்மனியைச் சார்ந்த மருத்துவரான அலோயிஸ் அல்சைமர் உலகுக்கு எடுத்துரைத்தார். இந்த நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது.  பழகிய முகங்களைக்கூட மறந்துவிடுவார்கள். முடிவுகள் எடுக்கச் சிரமப்படுவார்கள். இந்தக் கொடிய மறதிநோய் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 21-ம் தேதியை ‘உலக அல்சைமர் விழிப்புஉணர்வு தினமாக’க் கடைப்பிடித்து வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick