எடைக் குறைப்பு மாத்திரைகள் செய்யுமா மேஜிக்?

கருணாநிதி, பொது மருத்துவர் - உமா, உணவியல் நிபுணர்ஹெல்த்

‘உடல் எடை குறைக்க இனி மூச்சு வாங்க ஓடவோ, உடற்பயிற்சி, ஜிம், டயட் என்று சிரமப்படவோ தேவையில்லை. எங்கள் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள்... ஒரே மாதத்தில் எடை குறைந்துவிடும்’ என்பதுபோன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை ஆங்காங்கே பார்த்திருப்பீர்கள். இந்த விளம்பரங்களைக் கண்டு மயங்கும் பலர் அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, உடல் எடை குறைக்க விரும்பும் இளம்பெண்களின் லேட்டஸ்ட் சாய்ஸ் `டயட் பில்ஸ்’ என்று சொல்லப்படும் இந்த மாத்திரைகள்தான்.

இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா? மாத்திரைகள் மூலம் உடல் எடையைக் குறைக்க முயல்வது சரியா? இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா?

விரிவாகப் பார்க்கலாம்.

 டயட் பில்ஸ்

டயட் பில்ஸை, ‘பசியைக் கொல்லும் மாத்திரைகள்’ என்று சொல்லலாம். இவை முழுக்க முழுக்க வேதிப்பொருள்களைக் கொண்ட கலவையாகும். கபைஃன் (Caffeine), எபிட்ரா (Ephedra) போன்ற தாவரங்களிலிருந்து கிடைக்கும் ஆல்கலாய்டு வகை வேதிப்பொருள்களையும் வேறு சில வேதிப்பொருள்களையும் சேர்த்துத் தயாரிக்கப்படுபவை.

உடல் எடை குறைப்பதற்காகவே இந்த வகை மாத்திரைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளிலிருந்து 50 வருடங்களுக்கு முன்பே நம் ஊருக்கு வந்துவிட்டன இந்த மாத்திரைகள். ஆரம்ப காலத்தில், ‘எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். அத்துடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்’ என்றனர். இப்போது, ‘உணவே வேண்டாம். டயட் பில்ஸ் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்; பசியும் கட்டுப்படும்; உடல் எடையும் குறையும்’ என்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick