விவாதித்தால் வெயிட் கூடலாம்!

ஹெல்த்

ருத்து வேறுபாடுகள் உறவுகளை மேம்படச் செய்யும் என்பது சரிதான். ஆனால் அடிக்கடி சண்டை போடுவது, சத்தமாகப் பேசுவது போன்றவற்றால் உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

குரல்வளையில் சேதம்

கத்துவது அல்லது சத்தமாகப் பேசுவதால் குரல் தற்காலிகமாகக் கரகரப்பாகலாம். இன்னும் சிலருக்குக் குரல்வளையில் சேதம் ஏற்படலாம் அல்லது நிரந்தரமாகக் குரலை இழக்க நேரிடலாம்.

கழுத்துப் பிடிப்பு

விவாதத்தின்போது உங்கள் தாடை மற்றும் கழுத்துத் தசைகள் இறுகப் பற்றிக் கொள்வதால், கழுத்தில் வலி ஏற்படும்.

நோய்த் தொற்று

கார்டிசோல் எனும் ஹார்மோன் அதிகம் சுரந்து நோய்த் தடுப்பு மண்டலத்தை மட்டுப்படுத்துவதால், நோய்த் தொற்றுகள் எளிதில் பாதிக்கக்கூடிய நபராக மாற்றிவிடும்.

உடல் எடை அதிகரித்தல்

விவாதம், மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது கார்டிசோல் ஹார்மோன் வெளியிடுவதைத் தூண்டக்கூடியது. இந்த ஹார்மோன் அதிகப் பசி, உடல் பருமன் அதிகரித்தல் (குறிப்பாக இடுப்புப் பகுதியில்) ஆகியவற்றுக்குக் காரணமாக அமையும்.

தமனிகள் கடினமாதல்

கோபம் மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதுடன் ரத்தக்குழாய்களை கடினமாக்கும். மேலும், இது பக்கவாதம் ஏற்பட ஆபத்தான ஒரு காரணியாகும்.

முதுகுவலி

கோபப்படுவதால் முதுகுப்புற தசைகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது முதுகுவலியை ஏற்படுத்தும் (குறிப்பாக வயதானவர்களுக்கு).

- ச. கலைச்செல்வன்


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick