குழந்தைகளை முடக்கிப் போட்ட மஸ்குலர் டிஸ்ட்ரோபி

அன்பால் சாதிக்கும் அம்மா!ஹெல்த்

பெரும்பாக்கம் எட்டடுக்கு மாளிகை. சென்னை நகருக்குள் குடிசைகளிலும், நதிக்கரைகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களை வேரோடு பிடுங்கி இங்குதான் கொட்டியிருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கப் பிரமாண்டமாகத் தெரியும் அந்தக் குடியிருப்புக்குள் நுழைந்தால், குருவிக்கூடுகள்போல வீடுகள். கழிவுநீரும் குப்பைகளும் கலந்து உறவாடும் அந்தக் குடியிருப்பில், கால் நீட்டி முடங்க முடியாத ஒரு சின்ன வீடு. ஒருபுறம் வைஷ்ணவியும் இன்னொரு புறம் சிவகுருவும் அமர்ந்திருக்கிறார்கள். முகத்தில் இருக்கும் வெளிச்சம் இருவரின் உடம்பிலும் இல்லை. பெரும்பாலான உறுப்புகள் முடங்கி, சுருண்டிருக் கின்றன. கண்களில் அவ்வளவு ஜீவன். எதிரில் அமர்ந்து இரு பிள்ளைகளுக்கும் சாதம் பிசைந்து கொண்டிருக்கிறார் செல்வி.

வைஷ்ணவிக்கு 23 வயது. சிவகுருவுக்கு வயது 19. ஆனால், இருவருமே குழந்தைகள்தாம். எங்கே அமர்ந்திருக்கிறார்களோ, அங்கிருந்து ஓர் அங்குலம் கூட நகர முடியாது இருவராலும். ஏன், அசையக்கூட முடியாது. அசைந்தால் ஏதேனும் ஓர் எலும்பு சிதறிவிடும். மலர்ந்திருக்கிற முகங்கள் வலியில் சுருங்கிக் கண்கள் பெருக்கெடுக்கும். அந்த வேதனை தாளாமல் செல்வியும் மருக, அந்தச் சிறு வீட்டில் எப்போதும் இனம் புரியாச் சோகம் அப்பிக் கிடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick