டாக்டர் டவுட் - இயல்பை மீறிய ரோம வளர்ச்சி (Hirsutism)

ஹெல்த்பூசந்திரன், நாளமில்லா சுரப்பியல் மற்றும் நீரிழிவு சிறப்பு மருத்துவர்

பெண்கள் சிலருக்குக் கன்ன ஓரங்கள், உதட்டுக்கு மேல், தாடை, கைகால்கள், அடிவயிறு என இயல்புக்கு அதிகமாக ரோம வளர்ச்சி இருக்கும்போது, அவர்களை மன இறுக்கம் வாட்டும். ‘எதனால் இப்படி?’, `பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?’, `நமக்குள் ஆண்தன்மை அதிகரித்து வருகிறதா?’, `இதை இப்படியே விட்டால் என்னவாகும்?’ என அவர்களுக் குள்ளேயே மனப்போராட்டம் நடக்கும். வெளியில் சொல்ல முடியாமலும் தீர்வைத் தேட முடியாமலும் தவிக்கும் அந்தப் பெண்களுக்கு ஆலோசனை கூறுகிறார் நாளமில்லா சுரப்பியல் மற்றும் நீரிழிவுநோய்ச் சிறப்பு மருத்துவர் பூசந்திரன்.

‘‘பொதுவாகப் பெண்களுக்கு முகம் மற்றும் உடம்பில் உள்ள ரோமங்கள் மென்மையாகவும் அதிகக் கறுப்புத்தன்மையற்றும் இருக்கும். ஆனால், ‘ஹிர்ஸுட்டிஸம்’ (Hirsutism) எனப்படும் பிரச்னையால் ஏற்படும் ரோம வளர்ச்சியில் முடியின் தன்மை கடினமானதாகவும் இயல்பை விட அதிகக் கறுப்பாகவும் இருக்கும்.நெஞ்சு, முதுகு எனத் தேவையற்ற இடங்களில் அதன் வளர்ச்சி இருக்கும்’’ என்ற டாக்டரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick