டாட்டூ - அழகு முதல் அடிக்‌ஷன் வரை!

ஹெல்த்

டாட்டூ... ஃபேஷன், தன்னை வித்தியாசமாகக் காட்டிக்கொள்ள விரும்புதல் அழகுக்காக என்பனவையெல்லாம் தாண்டி ஓர் அடிக்‌ஷனாகவே மாறிவருகிறது! `நான் டாட்டூவுக்கு அடிமையாகிவிட்டேன்; இதை என்னால் நிறுத்தவே முடியாது; நான் இதை மிக விரும்புகிறேன்’ என்கிறார்  அமெரிக்க நடிகை அட்ரியான் பாலிக்கி (Adrianne Palicki).  உலக அளவில் டாட்டூ கலாசாரம் கொடிகட்டிப் பறப்பது அமெரிக்காவில்தான். இது தொடர்பான புள்ளிவிவரங்கள் நம்மை மலைக்கவைப்பவையாக உள்ளன. மொத்த அமெரிக்கர்களில் ஒரே ஒரு டாட்டூவையாவது போட்டுக்கொண்டிருப்பவர்கள் நான்கு கோடியே 50 லட்சம் பேர் என்கிறது ஓர் ஆய்வு. அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பாவின் பல நாடுகளில் வேரூன்றியிருக்கும் டாட்டூ பழக்கம், மேற்கிலிருந்து வந்த காரணத்தாலேயே நம் மக்களுக்கும் பிடித்துப் போய்விட்டது. வேகமாக இங்கேயும் பரவிக்கொண்டிருக்கிறது..

நவீனத்தின் மீதான ஈர்ப்பு என்று இதை எடுத்துக்கொண்டாலும் நம் தாத்தா, பாட்டி காலத்திலேயே இங்கே இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது... ‘பச்சைகுத்துதல்’ என்ற பெயரில்! நாகரிகம் மாற மாற மறைந்துபோன பச்சை குத்தும் பழக்கம், இப்போது `டாட்டூ’ என்ற பெயரில் இளைய தலைமுறையினரை ஈர்க்க ஆரம்பித்திருக் கிறது. திரைப்பட நடிகர், நடிகைகள், மாடல்கள், பிரபலங்களிடம் மட்டுமே ஃபேஷனில் இருந்த டாட்டூ மோகம் இன்று கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் என எல்லோரிடமும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. முதுகு, இடுப்பு, கைகால் என உடலின் எல்லா பாகங்களிலும் போட்டுக்கொள்கிறார்கள். டாட்டூ போட்டுக் கொள்வதற்குப் பின்னே இருக்கும் உளவியல் என்ன,  டாட்டூ போட்டுக்கொள்வதால் ஏற்படும் உடல், மனப் பாதிப்புகள் என்னென்ன? விரிவாகப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick