மன அழுத்தத்தை மனதாலே வெல்லலாம்! | The Causes of Stress and How to Overcome Them - Doctor Vikatan | டாக்டர் விகடன்

மன அழுத்தத்தை மனதாலே வெல்லலாம்!

ஹெல்த்சித்ரா அரவிந்த், உளவியல் நிபுணர்

ன அழுத்தம்... இதை மன உளைச்சல் என்றும் சொல்வார்கள். பொதுவாக மன அழுத்தத்தை இரண்டு வகைகளாகப் பிரிப்பார்கள். ஒன்று, புறநிலைக் காரணிகளால் வரக்கூடியது. அதாவது, இயற்கைப் பேரழிவுகள், பிரியமானவர்களின் மரணம், பிறரின் ஏச்சுப் பேச்சுகளால் ஏற்படும் மனவருத்தம் போன்றவற்றைச் சொல்லலாம். இது அனைவருக்கும் வரக்கூடியதே. இன்னொன்று, அகநிலைக்காரணிகளால் வரக்கூடியது. ஆனால், இது மனநிலைக்கு ஏற்ப மாறக்கூடியது. உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால், தேர்வு எழுதும்போது சிலருக்கு மன உளைச்சல் ஏற்படலாம்; வேறுசிலரோ அதே தேர்வை உற்சாகத்துடன் எதிர்கொள்வார்கள். இங்கே, அகநிலைக் காரணிகள் ஒவ்வொருவரின் மனப்போக்கைப் பொறுத்து மாறுபடுகின்றன.

மன அழுத்தத்துக்கான காரணங்கள் வயதுக்கேற்ப மாறக்கூடியவை. குழந்தைகளை அவர்தம் பெற்றோர் திட்டுவதாலும் சமவயதுள்ளவர்கள் திட்டுவதாலும், பதின்ம வயதினருக்குக் கல்விச் சுமையினாலும், ஆண்-பெண் உறவுநிலைச் சிக்கல்களாலும் வயதுக்கேற்ப மன அழுத்தம் ஏற்படலாம். வேலைக்குச் செல்பவர்களுக்குப் பணியிடங்களில் நெருக்கடிகள், பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல், வயது முதிர்ந்தவர்களுக்குப் பிள்ளைகள் செய்யும் அவமதிப்பு, உடல் கோளாறுகள், தனிமை போன்றவை மன அழுத்தத்துக்குக் காரணமாக அமைகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick