பெட் தெரபி... செல்லங்களே தரும் சிகிச்சை!

ஹெல்த்மினல் கவிஷ்வர், க்ளினிகல் சைக்காலஜிஸ்ட்

ன அழுத்தம் அதிகமான சமயங்களில் பலருக்கும் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் ஆறுதல் அளிக்கும். நாய்க்குட்டியோடு விளையாடுவது அல்லது மீன்களுக்கு உணவளித்துவிட்டு மீன் தொட்டியையே நீண்டநேரம் உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது எனச் செல்லப்பிராணிகளோடு நாம் செலவிடும் சில மணி நேரம்கூட நம்மைப் புத்துணர்வு பெறச்செய்யும். இதை மருத்துவ உலகமும் ஆமோதிக்கிறது. ஆம்! ஆட்டிசம், கேன்சர், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘அனிமல் அசிஸ்ட்டெட் தெரபி’ (Animal Assisted Therapy - AAT) அல்லது ‘பெட் தெரபி’ (Pet Therapy) என அழைக்கப்படும் சிகிச்சை முறை செல்லப்பிராணிகளைக் கொண்டே வழங்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick