மிகை எதார்த்தம் எதிர்பார்ப்புகள் கூட்டும் எதிர்கால மருத்துவம்

ஹெல்த்

பிரபல இயற்பியலாளரும் ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்றழைக்கப்படுபவருமான எட்வர்ட் டெல்லர், “இன்றைய அறிவியல் தான்... நாளைய தொழில்நுட்பம்” எனச் சொல்லியிருப்பார். இன்று நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன், பல ஆண்டுகளாக அறிவியல் உலகத்தில் நடந்த ஆராய்ச்சிகளின் பலனாகத்தான் நமக்குக் கிடைத்தது.இது போல, ஆக்மென்ட்டட் ரியாலிட்டி மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள்தான் இன்றைய ஆராய்ச்சிகளின் ஆணிவேர். இவைதாம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பது அறிவியலாளர்களின் கணிப்பு.

போகிமான் கோ விளையாட்டைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில், ஆக்மென்ட்டட் ரியாலிட்டி எனப்படும் இணைப்பு நிஜமாக்கலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட உருவத்தை, நிஜ உலகோடு இணைத்திருப்பார்கள். இதேபோல், சிறப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டால், செயற்கையாக ஓர் உலகம் கண்முன்னே தோன்றுவதைத்தான், வெர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் எதார்த்தம் என்கிறோம். இவை இரண்டையும் தொழில்நுட்பத்துறையில் மட்டுமின்றி, மருத்துவத்துறையிலும் தற்போது பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick