ஏன் அழுகை கண்ணே?

ஹெல்த்பாலகோபால், பச்சிளம் குழந்தைகள் மருத்துவர்

குழந்தை பிறந்துமே அழவேண்டும். அதுதான் குழந்தையின் ஆரோக்கியத்துக்கான அடையாளம் என்பார்கள் மருத்துவர்கள். பிறந்ததிலிருந்து அடிக்கடி அழும் குழந்தைகளை நினைத்துத் தாய்மார்கள் பயப்படுவதும் பதறுவதும் உண்டு. பச்சிளம் குழந்தைகளின் அழுகைக்கான காரணங்களைத் தெரிந்துகொண்டால் பயமோ பதற்றமோ தேவையில்லை. பிறந்த குழந்தைகள் ஏன் அழுகின்றனர்? விளக்குகிறார் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் பாலகோபால்.

``ஒரு மாதத்துக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் பசி மற்றும் தூக்கம் என்ற இரண்டு விஷயங்களுக்குத்தான் பெரும்பாலும் அழுகின்றனர். இவைதவிர பால் குடித்த ஏப்பம் வெளியேறாமல் இருக்கும்போதும் அழுகை இருக்கும். அந்த நேரத்தில் குழந்தையை நெஞ்சு அல்லது தோளில் அணைத்தவாறு சாய்த்துக்கொண்டு, முதுகில் நீவிவிட்டாலே ஏப்பம் வந்துவிடும். இரண்டு அல்லது மூன்று மாதமான குழந்தைக்குத் தாயின் கதகதப்பு மிகவும் அவசியம். தாயின் உடல்சூடு அந்தக் குழந்தைக்குப் பாதுகாப்பை உணர்த்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick