பேபி மூன் - இது இன்னுமொரு தேனிலவு!

குடும்பம்நித்யா ராமமூர்த்தி, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்

புதுமணத் தம்பதிகள் ஹனிமூன் செல்வது வழக்கம். அதுபோலவே இப்போது ட்ரெண்டாகிவரும் மற்றுமொரு சுற்றுலா, ‘பேபிமூன்’. அதாவது, கர்ப்பகாலத்தில் கணவனும் மனைவியும் தனித்து மேற்கொள்ளும் அன்னியோன்யப் பயணம். வெளிநாட்டில் பிரபலமான இது, தற்போது நம் நாட்டிலும் பலரால் விரும்பப்படுகிறது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், 2014-ம் ஆண்டில் அப்போது கர்ப்பமாக இருந்த தன் மனைவி கேத் மிடில்டனுடன் கரீபியன் தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்றார். அந்தப் பயணம் ‘பேபிமூன்’ என்று வர்ணிக்கப்பட்டு, உலகம் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. கணவன், மனைவிக்கு இடையே அன்பை அதிகரிக்கும் இந்தச் சுற்றுலாவில், வயிற்றுக்குள் வளரும் குட்டி உயிரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டியது மிக முக்கியம். அதற்கான வழிகாட்டல்களை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick