வாழ்தல் இனிது! - உறவுகள் இனிக்க உன்னதப் பழக்கங்கள்!

குடும்பம்

மும்பையைச் சேர்ந்தவர் ரித்துராஜ் சஹானி. மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கும் இவர், அங்குள்ள, பிரபல, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  தந்தை இறந்துவிட,  இவருடைய தாய் ஆஷா சஹானி மட்டும் மும்பையில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.  ரித்துராஜ், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், இந்தியா வந்து தாயைச் சந்தித்துவிட்டுச் செல்வது வழக்கம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  இந்தியா வந்திருந்தார் ரித்துராஜ், நீண்ட நேரம், ‘காலிங்பெல்’ அடித்தும் அவரின் தாய் கதவைத் திறக்கவில்லை.  பூட்டை  உடைத்து வீட்டிற்குள் சென்ற ரித்துராஜுக்கு பெரும் அதிர்ச்சி. உள்ளே அவரின் தாய், இறந்து பல நாள்கள் ஆன நிலையில், எலும்புக்கூடாக கிடந்துள்ளார்.

விசாரணையில் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தன் தாயுடன் கடைசியாகப் பேசியதாக  ரித்துராஜ் கூறியதைக் கேட்டுக் காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். ஆஷா மகனிடம் கடைசியாக போனில் பேசும்போது,  “என்னால் தனியாக வசிக்க முடியவில்லை. முதியோர் இல்லத்திலாவது சேர்த்துவிடு” என்று வருத்தத்தோடு பேசியிருக்கிறார். ஆஷாவின் மரணம் ரித்துராஜை மீளாச் சோகத்தில் ஆழ்த்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick